தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பது தான் உண்மை என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை இலவசமாக வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
கோவையில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை இலவசமாக வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலர் டெபாசிட் தொகையை இழந்தனர். கடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்தும், தோல்வி குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தனது கருத்தைத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், “தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவீதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவர் கட்சியை காவல் நிலையம் போல நடத்துகிறார். பாஜகவில் இணைந்ததும் என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்று என்னைத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீசியா வந்து விடும். கொஞ்சம் தெளிய விட வேண்டும். எனவே, அண்ணாமலையை ஊடகங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம். சிலருக்கு மைக்கை கண்டால் உளறல் ஆரம்பித்து விடும். அந்த மாதிரி தம்பி அண்ணாமலை கொஞ்சம் உடல் நலத்தைப் பார்ப்பது நல்லது.
என்னைத் தெரியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் கேட்டுப் பாருங்கள். எஸ்.வி.சேகர் யாருன்னு சொல்லுவார். இன்னும் சில நாட்கள் போனால், நரேந்திர மோடிக்கு அண்ணாமலை யாரென்று தெரியாமல் போய் விடும்.
தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பது தான் உண்மை.
பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் வாக்குகுளையும் சேர்த்து தான். இந்நிலையில், வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours