விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் மங்களகரமாக நடந்து முடிந்துள்ளது. பூஜை விழாவில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் கலந்து கொன்டுள்ளனர்.
தளபதி விஜய் அடுத்த நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 68’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் மிகப் பெரிய அளவில் தயாரிக்கிறது.
படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. இந்நிலையில், இந்த படத்துக்கான பூஜை இன்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்றது.
இந்த பூஜை விழாவில், விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்ட படத்தின் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த விழாவில் எதிர்பாராத சிலர் கலந்து கொண்டனர், அவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யின் அப்பா கதாபாத்திரத்திற்கு சினேகாவும், மகன் கதாபாத்திரத்திற்கு மீனாட்சி சவுத்ரி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது ஒரு குடும்ப திரைப்படம் என்பதால், இந்த நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, விஜய் ‘வாரிசு’ என்ற குடும்ப படத்தை வழங்கியதால், மறுபடியும் குடும்ப படமா? என்று ஒரு சில ரசிகர்கள் மனதில் கேள்வி எழுப்ப வைத்திருந்தாலும், இது வெங்கட் பிரபு திரைப்படம் என்பதால் வரும் நாட்களில் வெளியாகும் அப்டேட்டை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
இன்று படத்தின் பூஜை முடிந்த நிலையில், நாளை இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், இந்த படத்திற்கான 2 பாடல்கள் முடிந்துவிட்டதாகவும், ‘லியோ’ படம் வெளியான பிறகு வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours