தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் இருவரும் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டனர்.
இதில் தமிழக அரசின் தொழில்துறை செயலாளராக உள்ள கிருஷ்ணன் ஐஏஎஸ், மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் – மின்னணுவியல் அமைச்சக செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். ஜனவரியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் நடத்தும் பொறுப்பில் இருந்த கிருஷ்ணன் திடீர் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுபோன்று, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours