பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி..! ஆளுநர் ஆர்.என்.ரவி

Spread the love

இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இவரது பிறந்தநாளையொட்டி மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்கள் பாராட்டுகளை வெளிப்படுத்த நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் விரிவான நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்த நாளில் அரசியல் தலைவர்கள் பலரும் ஆசிரியர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், “தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், சிறந்த ஆசிரியர், தத்துவஞானி, மாபெரும் தலைவர் & இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுநர் ரவி மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், அவரது வாழ்க்கையும் சேவையும் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும். என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours