உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரை ரசிகர் ஒருவர் பிரமிக்க வைத்துள்ளார்.
உலக கோப்பை போட்டி 2023 -ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டி நாளை அகமதாபாத்தில் இங்கிலாந்து vs நியூசிலாந்த் அணிகளுக்கு இடையே போட்டி தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து சென்னையில் மட்டும் நான்கு போட்டிகள் நடைபெற உள்ளது. அந்த வகையில்,வருகிற அக்டோபர் 08 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இதற்காக சர்வதேச தரத்திற்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானம் தயாராகி வருகிறது.இந்த நிலையில்,உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ரசிகர் ஒருவர் ,வார்னரின் பெயரை இந்திய அணியின் ஜெர்ஸியில் அச்சிட்டு வந்து, மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றுள்ளார். அதனை வார்னர் வீடியோ எடுத்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
+ There are no comments
Add yours