சொத்து குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது நீதிமன்றம்

Spread the love

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை விடுவித்த உத்தரவு ரத்து – மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் ஆணை.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஆணை பிறப்பித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து இரு அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours