மீரா விஜய் ஆண்டனி உடல் நல்லடக்கம்… கலங்க வைத்த இறுதி ஊர்வலம்!

Spread the love

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. 16 வயதே ஆன மீராவின் இந்த முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சக தோழிகள், ஆசிரியைகள் என அனைவருமே அச்சிறுமியின் நற்பண்புகள் குறித்தும், சிரித்த முகம் குறித்தும் நினைவுகளைப் பகிர்ந்தப்படியே கண்கலங்கி இரங்கல் தெரிவித்தனர். மீராவின் உடல் இன்று காலை கீழ்பாக்கம் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் மீராவின் உடலுக்கு ஒரு மணிநேர சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேவாலயத்தில் இருந்து மீராவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours