கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசு எடுத்துவரும் தீவிரமான நடவடிக்கை வரவேற்கதக்கது என்று இ.கம்யூ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
காவல்துறையில் பணி செய்யும் கருப்பு ஆடுகள், வருவாய்த்துறை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு, சாராயம் காய்ச்சுபவர், விற்பவர்கள் என அனைவரும் சேர்ந்து கூட்டு அமைத்து கடந்த 15 ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்றுள்ளது.
அவர்களை கண்டறிந்து வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அவர்களுக்கு அச்சம் ஏற்படும். மேலும் மதுவுக்கு எதிராக மக்களிடம் அரசும், அரசியல் கட்சியினரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அப்போதுதான் இத்தகைய துயர சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தடுக்க முடியும்.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் கடுமை காட்டும் மத்திய அரசு, வினாத்தாள் கசிவு விசயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன்? முறைகேடு நடந்தது உறுதியான பின்னும் மத்திய கல்வி அமைச்சர் மவுனமாக இருக்கிறார் என்றும் முத்தரசன் தெரிவித்தார் .
+ There are no comments
Add yours