லேட்டாக வந்த தலைமை ஆசிரியை… ”Left Right”வாங்கிய மாநகராட்சி மேயர்!!

Spread the love

கடலூரில் மாநகராட்சி பள்ளியில் மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது பள்ளியில் தலைமை ஆசிரியர் தாமாக வந்ததால் ”வாங்குற சம்பளத்துக்கு வேலை பாருங்க.” என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிங்காரத்தோப்பு அருகே 45வது வார்டு பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டதின் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சி பள்ளிகளில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பாக கடலூர் மாவட்ட மேயர் சுந்தரி ராஜா முதுநகர் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து முதுநகர், சோணக்குப்பம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பொது பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாதது தெரியவந்தது.உடனே மேயர் பள்ளியில் மாணவர்கள் சரியான நேரத்திற்கு வந்ததற்கு பிறகும் தலைமை ஆசிரியர் ஏன் வரவில்லை ? காலை சிற்றுண்டி திட்டத்தை தலைமை ஆசிரியர் தான் பார்த்து அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்ப

அப்போது வருகை தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் பள்ளிக்கு குறித்த நேரத்தில் ஏன் வரவில்லை. நன் இந்த பள்ளி 3 முறை வருகை தந்தேன். நான் பள்ளிக்கு வருகை தரும் பொது எல்லாம் நீங்கள் பள்ளியில் இருப்பது இல்லையென சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

பிறகு இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த பொது பள்ளியில் தலைமை ஆசிரியர் குறித்த நேரத்தில் வருவதில்லை என தெரியவந்தது. அப்போது ஆவேசம் அடைந்த மேயர் சுந்தரி ராஜா ”வாங்குற சம்பளத்துக்கு வேலை பாருங்க என்று கூறி எச்சரிக்கை விடுத்த சம்பவம் அதிகரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours