செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமானவரி துறை சோதனை..!

Spread the love

சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் செந்தில் பாலாஜியிடம் உதவியாளராகவும் இருந்துள்ளார். செந்தில்பாலாஜி இடங்களில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் பல்வேறுகட்ட சோதனை நடைபெற்று வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours