கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு.. மேலும் பலர் கவலைக்கிடம் !

Spread the love

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை மூன்று பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே நேற்று முன்தினம் இரவு கள்ளச்சாராயம் அருகில் 3 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் அருந்திய மேலும் பல உடல் நலக்குறைவுகளுடன் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரது உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழக்கத் தொடங்கினர்.

இப்போது வரை 35பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 30-க்கும் மேற்பட்டவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எத்தனால் எனப்படும் திரவத்தை சாராயத்தில் கலந்து விற்றதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண்குமார் ஜடாவத் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதியை, விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், எ.வ.வேலு ஆகியோர் முகாமிட்டு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours