அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற “எண்ணி துணிக” நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்என் றவு தமிழ் ஆளுமையுடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பு எனக்கு தமிழ் மொழியின் தொன்மை, தமிழ் இலக்கியங்கள் குறித்தும் தெரியாது.
இங்கு வந்த பின்னர் திருக்குறள் படிக்க தொடங்கினேன். திருக்குறள் ஆங்கில மொழிப்பெயப்பை படிக்கும்போது, தமிழ் மொழியின் மீது ஆழமான அன்பு ஏற்பட்டது. நான் ஆளுநரோ, இல்லையோ, தமிழ் மொழியை கற்றுக்கொள்வதை வாழ்நாள் லட்சியமாக மாற்றிக்கொண்டேன். தமிழை பயில்வதில் தத்தி நடக்கும் குழந்தை போல நான் இருக்கிறேன் என்பது முக்கியம் அல்ல. நான் தொடங்கிவிட்டேன் என்பதே முக்கியம்.
அறம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு இணையான ஒரு சொல் எந்த ஒரு ஐரோப்பிய மொழியிலும் இல்லை. தமிழ் மொழிக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டுமே, வேறு மொழிகள் இல்லை என சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், கடவுளை வழிபடுவது மட்டும் ஆன்மிகம் அல்ல, உயிரினம் கஷ்டபடுவதை பார்த்து கவலைகொள்வதும் ஆன்மிகம் தான் என்றார். மொழிதான் மக்களின் ஆன்மிகமாக உள்ளது. மக்களின் கலாச்சாரம், பண்பாட்டை விளக்குகிறது என்றார். மேலும், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற “எண்ணி துணிக” நிகழ்ச்சியில் 42 தமிழ் ஆளுமைகளுக்கு திருமுறை திருமகன், திருமுறை திருமகள் விருதுகளை ஆளுநர் வழங்கினார்.
+ There are no comments
Add yours