விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறும் நடக்கவில்லை: செல்வபெருந்தகை

Spread the love

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மறு ( Virudhunagar constituency ) வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கோரியுள்ள நிலையில் விருதுநகர் தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறும் நடக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நாட்டின் 17 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் வெளியிடப்பட்டது .

வாக்கு எண்ணிக்கையின் போது, விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் இரு முறை நாடாளுமன்ற வேட்பாளரான மாணிக்கம் தாக்கூருக்கு கடுமையான போட்டியாக இறுதி வரை இருந்தார் .

நள்ளிரவு வரை நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டும் பிரேமலதா விஜயகாந்த், அந்தத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு பலர் ஆதரவும் பலர் எதிர்ப்புகளும் தெரிவித்து வந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் நடந்த ( Virudhunagar constituency ) வாக்கு எண்ணிக்கையில் எந்த தவறும் நடக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours