திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா- டிச.13 உள்ளூர் விடுமுறை

Spread the love

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 4ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் கார்த்திகை மாத தீபத் திருவிழா தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் டிசம்பர் 13ம் தேதி அதிகாலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பரணி தீபமும், அன்றைய தினம் மாலையில் கோவில் பின்புறமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத் திருவிழாவைக் காண திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் மக்களும் விழாவில் கலந்து கொள்ள வசதியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிசம்பர் 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளான 2024ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்டத்தில் உள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை அனைத்து அலுவலகங்களும் பணி நாளாக செயல்படும். அவசர தேவைகளின் அடிப்படையில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கையுடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours