“டெங்குவை கட்டுப்படுத்த..”மா.சுப்பிரமணியன் !

Spread the love

டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி, 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. தமிழகத்தில் 2012ஆம் ஆண்டு 13,204 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, இதில் 66 நபர்கள் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர். 2017ஆம் ஆண்டு 23,294 நபர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, 65 நபர்கள் டெங்கு பாதிப்பில் இறந்துள்ளனர். தமிழக முதல்வர் இதுபோன்ற பாதிப்புகளை தமிழகம் சந்திக்கக் கூடாது என்பதற்காக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில், உள்ள சென்னை, திருவள்ளூர், தென்காசி, கோவை, மதுரை உள்ளிட்ட, 45 சுகாதார மாவட்டங்களில், 25க்கும் மேற்பட்ட சுகாதார மாவட்டங்களில், இம்மாத தொட்டக்கத்தில் இருந்து, டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 128 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.இந்த நிலையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது…

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன் ஏற்படும் பாதிப்பு தான் இது. இதுவரையில் காய்ச்சலால் மதுரையில் 17 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தி அனைத்து உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு யார் யார் என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours