மதுரை; மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் தற்போது பணிபுரியும் உயர் அதிகாரிகள் இடமாறுதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த வாரம் மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மூவர் உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக தற்போது மாநகராட்சி ஆணையர்கள், துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்தில் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் கே.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
+ There are no comments
Add yours