இடமாறுதல் செய்யப்பட்ட நீதிபதி..!!பின்னணி என்ன?”

Spread the love

தமிழக அமைச்சருக்கு எதிரான வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து எடுத்து நடத்திய பதிலாக இனி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நடைபெற உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்கள் விசாரிக்கும் வழக்குகளின் துறைகள் மாற்றப்பட்டு, இடமாறுதல் செய்யப்படுவது வழக்கம்.

தற்போது வரும் அக்.3 முதல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் துறைகளை மாற்றம்செய்து தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில்,3 மாதங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக ஜி.ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக சொத்துக்குவிப்பு உள்ளிட்ட வழக்குகளை தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருந்தார்.

இந்த நிலையில் , நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வேறு வழக்குகளை அந்த வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில்அமைச்சர்களின் சொத்து குவிப்பு வழக்குகளை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours