சிறையில் இருந்து வந்த டி.டி.எஃப் வாசன்..!

Spread the love

புழல் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார்.

டி.டி.எஃப் வாசன் பைக் சாசகம் செய்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் இழுத்தவர். இதற்கிடையில் “மஞ்சள் வீரன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனது உயர் ரக பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். டிடிஎப் வாசன் அதி வேகத்தில் சென்றதால் விபத்து நடந்தாக கூறப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதைத்தொடர்ந்து, போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து டிடிஎப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்க முடியாது எனக்கூறி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விபத்தில் தான் காயமடைந்துள்ளதால் சிறையில் உரிய சிகிச்சை பெற முடியவில்லை அதனால் ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎப் வாசன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாசனுக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து யூடியூபர் டி.டி.எஃப் வாசன் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய யூடியூபர் டி.டி.எஃப் வாசன், லைசென்ஸ் போனபோதுதான் மனம் வருந்தி, கண் கலங்கிவிட்டேன். ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தது என்னை திருத்த வேண்டும் என்பதற்காக செய்யவில்லை, எனது வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்பதற்காக செய்ய மாதிரி உள்ளது என தெரிவித்தார்.

பைக் ஓட்டுவதை நிறுத்த மாட்டேன். சர்வதேச லைசென்ஸ் இருக்கு, இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் குறித்து மேல்முறையீடு செய்வேன் என கூறினார். இதற்கிடையில் டிடிஎப் வாசனின் ஜாமின் மனு 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours