பாஜக மீது உதயநிதி கடும் பாய்ச்சல்!

Spread the love

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை – கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தந்தை பெரியார் பிறந்த் நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எண் 7, பவளக்காரத் தெருவில் போடப்பட்ட விதை, தி.மு.கழகம் எனும் ஆலமரமாக இன்று பவள விழா காண்கிறது.

பேரறிஞர் அண்ணாவால் ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்ட பயணம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 75 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் – எண்ணிலடங்கா போராட்டங்கள் கடந்து கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டோடு தமிழ்நாடு காத்து நிற்கிறது நம் கழகம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் – தமிழ் மக்களின் மேன்மைக்கும் கழகம் ஆற்றிய பணிகள் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை – கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வீட்டுக்கு அனுப்ப கழகம் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ராயிரம் ஆண்டுகளாக சாத்திரம் – சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம்.

மானமும் – அறிவும் மனிதனுக்கு அழகு – சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம். சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார்! என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours