வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி..

Spread the love

வாச்சாத்தி மலை கிராம பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தற்போது உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதனால், வாச்சாத்தி கொடூரம் தொடர்பான குற்றவாளிகளின் மேல்முறையீடு மனுக்களை நீதிபதி வேல்முருகன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதுமட்டுமில்லாமல், வாச்சாத்தியில் பாலியல் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். கடந்த 1992ல் தருமபுரி அருகே வாச்சாத்தி மலை கிராமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதாவது, 1992 ஜூன் 20ம் தேதி வாச்சாத்தி மலை கிராமத்தில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தருமபுரி அருகே உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கியதாக கூறி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில் 1995ல் 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது. சந்தனக்கட்டை சோதனை என்ற பெயரில் பெண்களிடம் காவல்துறை, வருவாய்த்துறை அத்துமீறி உள்ளனர்.

2011ல் இந்த வழக்கில் 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, குற்றாவளிகளுக்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில், பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து இவ்வழக்கில் தொடர்புடைய 54 பேர் காலமான நிலையில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு விசாரணையை முடித்து ஐகோர்ட் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். அதில், வாச்சாத்தி வழக்கில் குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.

எனவே, வாச்சாத்தி பெண்கள் பாலியல் கொடூர வழக்கில் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்தார். குற்றவாளிகளான பல்வேறு துறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் வரை தண்டனை வித்திருந்தது. இவ்வழக்கில் குற்றவாளிகள் யாரேனும் ஜாமீனில் இருந்தால் அவர்களை கைது செய்ய கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலை அல்லது சுய தொழிலுக்கு உதவி வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours