தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் இன்று (அக். 27) மாலை நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் இன்று (அக். 27) மாலை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதுமிருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் முழுவதும் திறக்காது என்று அரசு அறிவித்திருக்கிறது.
தமிழக அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை வரவேற்பை பெற்று வருகிறது.
+ There are no comments
Add yours