விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், இன்று தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில், திமுக சார்பில் புகழேந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து எட்டாம் தேதி முதல் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைதேர்தல் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி இடைதேர்தலுக்கான, வாக்குப்பதிவு ஜூலை 10- ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வரும் 21-ம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் ஜூலை 24-ம் தேதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். ஜூலை 26-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி தேதியாகும்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வேட்பாளராக திமுக சார்பில் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி உள்பட எந்த கட்சியிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours