கரூரில் விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சீல் வைத்த சம்பவத்திற்கு அண்ணாமலை திமுக சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் மனதை புண்படுத்துகிறது என விமர்சித்துள்ளார்.
செப்டம்பர்18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள் கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளை கரைப்பது வழக்கம்.
இதற்காக கரூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகர் சுமன் கேட் பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வடிமைக்கப்பட்டு இருந்தது.அப்போது திடீரென்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்
அந்த கூடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.
அப்பொழுது விதிகளை மீறி செய்யப்பட்டதாகவும் பிளாஸ்டோ பாரிஷ் என்ற கெமிக்கல் கலவையை கலந்து பயன்படுத்திய நிலையில் அந்த கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மேலும் விநாயகர் சதுரத்தை கொண்டாடப்பட உள்ள நிலையில்,இந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
நமது பண்டிகைகள் வழங்கும் பலன்களை நம்பியிருக்கும் மக்களின் வியாபாரத்தை சீர்குலைப்பதன் மூலம், திமுக சனாதன தர்மத்தை கடைப்பிடிப்பவர்களின் உணர்வுகளை புண்படுத்துவது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரத்தில் பல மடங்கு விளைவையும் நிறுத்துகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊழல் திமுக அரசின் இந்த அடக்குமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவிற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :
கரூர் மாவட்டத்தில் மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக Plaster of Paris கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் குறித்து சமூக வலைகளில் திரித்து கூறப்படுகிறது. அது குறித்த அறிக்கையும் தீர்ப்புரைகளும் பின் வருமாறு.
விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டுசிலை வைப்பது மற்றும் கரைப்பது குறித்தும் விநாயகர் சிலை அமைக்கும் அமைப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசணை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதும் / சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயன கலவை அற்றதுமான சுற்றுச்சுழுலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருட்களால் ஆன சிலைகளை நிறுவக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் தாந்தோணி கிராமத்தில் சுங்ககேட், கலைஞர் நகர் 2-வது கிராஸ் என்ற இடத்தில் சிலை செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திரு.சத்ராராம் என்பவர் விநாயகர் சிலைகளை அரசு சட்டவிதிகளுக்கு உட்படாமல் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் இரசாயனம் கலந்து தயாரிக்கப்பபடுவதாக தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்களிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இராசாயனம் கலந்து செய்யப்பட்ட சிலைகளை விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுன் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours