இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை அறிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதனோடு இவிஎம் வாக்குகளை எண்ணும் பணி 8.30 மணிக்கு தொடங்கியது.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், அரக்கோணம், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், மதுரை, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட 34 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 540 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இதில் 441 தொகுதிகளில் பாஜக தனித்து தேர்தலைச் சந்தித்துள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகள் 99 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டுள்ளன.
மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஆட்சியைப் பிடிக்க 272 இடங்கள் தேவை. மக்களவையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் பெற, எதிர்க்கட்சி மொத்த இடங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் அதாவது 55 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய முன்னணி நிலவரம் –
BJP – 258
INDI – 182
OTHERS – 19
+ There are no comments
Add yours