ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்… பிசி ஸ்ரீராம் !

Spread the love

தமிழக சட்டப்பேரவையின் 2024 ஆம் ஆண்டின் முதல்கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சட்டப் பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, பேரவை தலைவர் அப்பாவு, துணை தலைவர் பிச்சாண்டி மற்றும் பேரவை செயலர் சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து தமிழில் வணக்கம் சொல்லி உரையை தொடங்கினார் ஆளுநர் ஆர்என் ரவி.

அப்போது தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்காமல், சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நிமிடங்களில் தனது உரையை முடித்துக்கொண்டார்.

இதனால் சட்டபேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய அப்பாவு சாவர்க்கர் மற்றும் கோட்சே வழி வந்தவர்களுக்கு தாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை என்றுகூறி ஆளுநரை சாடினார்.

இதையடுத்து சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். ஆளுநர் ஆர்என் ரவி தமிழக அரசின், உரையை சட்டபேரவையில் புறக்கணித்ததும், ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்ததும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் செயல்பாட்டுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததற்கும் ஆளுநர் அவையில் இருக்கும்போதே கோட்சே, சாவர்க்கர் குறித்தெல்லாம் சபாநாயகர் தேவையில்லாமல் பேசியதாக பாஜகவும் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளரான பிசி ஸ்ரீராம் ஆளுநர் ஆர் என் ரவியை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்என் ரவி பதிவிட்டுள்ள டிவீட்டில், மன்னிக்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி சார், நீங்கள் நடந்து கொண்டவிதம் ஏற்புடையதல்ல; பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் ஏன் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்கள்? என கேட்டுள்ளார். பிசி ஸ்ரீராமின் இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours