“அதிமுகவை போல் காங்கிரஸ் உடனான உறவை திமுக துண்டிக்குமா..?” – சீமான் கேள்வி

Spread the love

அரியலூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது :

அதிமுக- பா‌ஜ.க கூட்டணி முறிந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்கான வாழ்த்துகளை நான் முன்னரே சொல்லிவிட்டேன். பா.ஜ.க, காங்கிரஸ் போன்றவர்களை கூட்டணியில் சேர்த்து அவர்களுடன் பயணிப்பது தேவையில்லாதது.

காவிரியில் இருந்து நமக்கு கர்நாடகா தண்ணீர் தரவில்லை, இதனை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் போராடுமா? எதற்கும் துணை நிற்காதவற்களுக்கு எதுக்கு தான் ஓட்டு? இந்த மாதிரியான முடிவுகளை அதிமுக தான் துணிச்சலாக எடுக்கும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதா எடுத்தார்கள் தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார் .

இந்த மாதிரியான முடிவை திமுக எடுக்கமா என்றால் அது கேள்விக்குறியே..? என் இனத்தை கொன்ற காங்கிரஸ் உடனான உறவை திமுக துண்டிக்குமா? காவிரியில் தண்ணீர் தராத காங்கிரசை திமுக தூக்கி எறியுமா?” என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியில் களத்தில் அண்ணன் தம்பியாக பழகி வந்த அதிமுகவும் – பாஜகவும் தற்போது தங்களது கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours