அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் என்பது ஒரு நாடகம் !!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பாஜகவில் இருந்து அதிமுக விலகியதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுச்செயலாளர் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக தொடர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, பாஜகவில் இருந்து அதிமுக விலகுவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அதிமுக இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாஜகவில் இருந்து அதிமுக விலகியது குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

குழம்பி போயுள்ள அதிமுக, மக்களையும் குழப்பி வருகிறது. 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள். திமுகவில் பல்வேறு அணிகள் உள்ளது. அதுபோல, பாஜகவில் உள்ள ஒரு அணிதான் அதிமுக. அதிமுக அண்ணா திமுக என மக்கள் நினைக்கவில்லை, அமித்ஷா திமுக.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின், அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள். கூட்டணியில் இருந்து விலகல் என்பது ஒரு நாடகம். தேர்தல் நேரத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஓட்டு கேட்க வருவார்கள். ஒருத்தன் திருடன் என்றால், ஒருத்தன் கொள்ளைக்காரன். இதுதான் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம் என விமர்சித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours