திருவள்ளூர்: காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 90 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வழக்கம்போல் ஆவின் பால் உற்பத்தி ஆலையில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு பால் அனுப்பும் பணி நடைபெற்றுள்ளது. பால் உற்பத்தியாகி வெளியே வரும்போது, அதனை பிளாஸ்டிக் டப்பில் அடுக்கி அனுப்பும் பணியில் உமா ராணி(30) என்பவர் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது துப்பட்டா மற்றும் தலைமுடி இயந்திரம் அருகே உள்ள மோட்டார் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உமா ராணி தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
+ There are no comments
Add yours