என்னை கட்சியில் இருக்குது நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாதக நிர்வாகி வெற்றிக்குமரன் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியைச் சேர்ந்த செ.வெற்றிக்குமரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சீமானின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ள நாதக நிர்வாகி வெற்றிக்குமரன் கூறிருப்பதாவது :
எல்லாம் தெரிந்த உங்களுக்கு நமது கட்சியின் விதிகள் தெரியாதது கவலை அளிக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி விதிமுறைகளின் படி என்னை நீக்குவதற்கு உங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பதையும் மாநில பொறுப்பில் இருக்கும் என்னை பொதுக்குழுவை கூட்டித்தான் நீக்க முடியும் என்பதையும் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன் என செ.வெற்றிக்குமரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்குள் சிறு சிறு சலசலப்புகள் நிலவி வரும் நிலையில் தற்போது சீமான் மற்றும் வெற்றிக்குமரன் விவகாரம் பேசும் பொருளாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours