முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் சிறைக்கைதிகள் மேலும் 9 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சிறைகளில் தண்டனை பெற்று வரக்கூடிய கைதிகளில். நன்னடத்தையோடு இருக்கும் கைதிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் சிறையில் இருக்கும் 9 ஆயுள் சிறைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதாக சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
113-வது பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த முன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுள் சிறைக்கைதிகள் 9 பேரும் பனகுடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் ஆவர். கடந்த 1999-ம் ஆண்டு இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்கள் அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்த நாளையொட்டி இதுவரை 344 கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours