உதயநிதி, சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யுங்கள்… ஆளுநரிடம் பாஜக நேரில் மனு !

Spread the love

’’அமைச்சர் உதயநிதி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும், அமைச்சராகப் பொறுப்பேற்கையில் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் பி.கே.சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும்’’ என தமிழக பாஜகவினர் தமிழக ஆளுநரிடம் நேரில் மனு அளித்துள்ளனர்.

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சு தமிழகம் தாண்டி வட மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி, அமித் ஷா, நட்டா என வரிசையாக பாஜக தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

வட மாநிலங்களில் பல இடங்களில் உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அதில் ’’சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுவதும் அதே மேடையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அமர்ந்திருந்ததும் அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றபோது எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது என்பதால், இருவரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours