உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Spread the love

சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நேற்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு விளையாட்டின் போது மாடு முட்டியதில்உயிரிழந்த சிறுவன் உள்ளிட்ட இருவரது குடும்பங்களுக்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் தை 3 ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டுபோட்டி நடத்தப்படுகிறதுகூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று நடைபெற்ற சிராவயல்மஞ்சுவிரட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்சிவகங்கை நாடாளுமன்றஉறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

சிராவயல் மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்து விட்டபோது எதிர்பாராத விதமாக மாடு முட்டிமஞ்சுவிரட்டு பார்க்கவந்திருந்த வலையபட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பாஸ்கரன்  உயிரிழந்தார்அதேபோல பார்வையாளராகவந்த முத்துமணி என்ற 35 வயது இளைஞரும் மாடு முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் உள்ள நிலையில் இவர்கள் இருவரது குடும்பத்திற்கும்தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துஇருவரின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய்நிவாரண உதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours