குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவிஅளிக்கும் தேநீர் விருந்து.
தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ரகுபதி, தங்கம்தென்னரசு ஆகியோர் பங்கேற்பு.
அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்காவும் பாஜக சார்பில் கரு. நாகராஜன், பாஜகதலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆளுநரின் குடியரசு தேநீர் விருந்தில்மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று உள்ளார்
ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர்விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக , மதிமுக , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள்புறக்கணித்துள்ளனர். ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி–க்கள், எம்.எல்.ஏ–க்கள் மற்றும்நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours