கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம் இரவு 1 மணி வரை மட்டுமே: காவல் துறை அறிவிப்பு!

Spread the love

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நட்சத்திர உணவக பணியாளர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கோயில், சர்ச், பள்ளிவாசல் போன்ற வழிபாட்டு தளங்களில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசும் போது,”மது போதையில் வாகனம் ஒட்டுபவர்களைத் தடுக்க தடுப்புகள் வைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

செக்போஸ்ட்கள் கூடுதலாக அமைக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் அரங்குகளுக்கு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியான நாளாக புத்தாண்டை கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேம்பாலம் அடைக்கப்படும். அவசர தேவைக்கான வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்” என்றார்.

கோவை மாநகரில் ரோந்து காவலர்கள் அதிகளவில் பணியில் ஈடுபடுவார்கள் எனவும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குடிபோதையில் வாகனங்களை இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களைக் கண்காணிக்க நகரின் பல்வேறு பகுதிகளிலும் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours