தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் வெளுக்கப் போகிறது மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Spread the love

485கோவை, நீலகிரி, ஈரோடு உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours