பி.எஸ்.என்.எல் (BSNL) அதன் போட்டியாளர்கள் ஜியோ, ஏர்டெல் மற்றும் Vi (Vodafone Idea) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான பயனர் தளத்தை கொண்டிருப்பதால் கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்கி வருகிறது.
நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி தேவைப்படும் யூஸர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது பி.எஸ்.என்.எல் 425 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ஒரு புதிய ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பி.எஸ்.என்.எல்.லின் இந்த புதிய நீண்ட நாள் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 2,398 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 425 நாட்கள் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி உடன் வருகிறது.
இந்த பிளானை வாங்கும் யூசர்கள் அன்லிமிடெட் இலவச போன் கால்களை வேலிடிட்டி காலம் முழுவதும் அனுபவிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இந்த வேலிடிட்டி காலம் முழுவதும் ஒரு நாளைக்கு 2GB என்ற கணக்கில் மொத்தமாக 850GB டேட்டாவை சப்ஸ்கிரைபர்கள் பயன்படுத்தலாம். மேலும் இதில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS அனுப்பும் வசதியும் உள்ளது.
+ There are no comments
Add yours