மின்சாதனத்தில் கோளாறு ஏற்பட்டாலும், மின்சாரம் அதில் பாயும்போது அதை தற்செயலாக தொட்டாலும் அது கடும் ஆபத்தை விளைவிக்கலாம்.
அதிக வோல்டேஜில் மின்சாரம் வரும்போது, மின்சாதனத்தின் கேபிள் இறுக்கமாக இல்லையென்றாலும், சாதனத்தை தொடுபவர்களுக்கு ஷாக் அடிக்கலாம்.
மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, வீட்டில் ஏசி அல்லது எந்தப் பெரிய உபகரணங்களையும் நிறுவும் முன்பும் எர்த்திங் செய்வது அவசியம்.
வீடு கட்டும்போதே, அந்த செலவோடு எர்த்திங் செய்தால், பல ஆபத்துக்களிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ளலாம்.
அடிப்படையில் வீட்டில் நான்கு விதமான எர்த்திங் செய்யப்படுகிறது. இதில் பட்டை, தட்டு, குழாய் மற்றும் ஸ்ட்ரிப் எர்த்திங் ஆகியவை அடங்கும். உங்கள் வசதி மற்றும் தேவைக்கேற்ப ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்யலாம்.
மிக முக்கியமாக, எர்த்திங் செய்வதற்கு முன்பு பயிற்சி பெற்ற எலக்ட்ரீஷியனை அணுக மறவாதீர்கள்.
+ There are no comments
Add yours