ரிலையன்ஸின் புதிய விளம்பரமில்லா 4K திரைப்படங்களுடன் கூடிய ஜியோசினிமா பிரீமியம் திட்டம் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு எதிரான போட்டியை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஜியோசினிமா பிரீமியம் பிளானானது, மிக மலிவு விலையில் அதிக யூசர்களை கவர்ந்திழுப்பதில் குறிவைப்பதில் கவனம் செலுத்துகிறது.
மேலும் ஷேரிங் பிளானுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்வதற்கான ஆப்ஷனையும் யூஸர்களுக்கு அவர்களுக்கு வழங்குகிறது.
யூஸர்கள் பிரத்யேக நிகழ்ச்சிகள், ஹாலிவுட் படங்கள் மற்றும் உள்ளூர் மொழிகளில் உள்ள கன்டென்ட்டை சிறிய அல்லது பெரிய திரையில் பார்க்க ஜியோ சினிமா அனுமதிக்கிறது.
ஜியோ சினிமா பிரீமியம் பிளான் 2024 :
ஜியோசினிமா பிரீமியம் பிளான் 2024-ஆனது பிரீமியம் மற்றும் ஃபேமிலி என மொத்தம் 2 வெர்ஷன்களில் வருகிறது. இந்த பிளான்களின் விவரம், அவற்றின் விலை எவ்வளவு பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
ஜியோ சினிமா பிரீமியம்:
ஜியோ சினிமா பிரீமியம் பிளானின் மாதாந்திர விலை ரூ.29 ஆகும். இந்த பிளான் யூஸர்களுக்கு விளம்பரமில்லா கன்டென்டை (ஸ்போர்ட்ஸ் மற்றும் லைவ் தவிர) எந்த ஒரு டிவைஸிலும் ஒரே நேரத்தில் 4K குவாலிட்டியில் வழங்குகிறது.
மேலும் ஷோக்களை ஆஃப்லைனில் டவுன்லோட் செய்து பார்க்கும் ஆப்ஷனை யூஸர்கள் பெறுவார்கள். இந்த பிளானை ஒரு நேரத்தில் ஒரே டிவைஸில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
+ There are no comments
Add yours