அனைவரும் மிகுவும் எதிர்பார்த்து காத்திருக்கும் முழு சூரிய கிரகண நிகழ்வு ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. முழு சூரிய கிரகண நிகழ்வை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவின் சில பகுதிகளில் காண முடியும். இருப்பினும், வெனிசுலா, ஸ்பெயின், கொலம்பியா, அயர்லாந்து, போர்ச்சுகல், இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட சில கரீபியன் நாடுகளில் பகுதி சூரிய கிரகணத்தை காண முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, இது இந்தியாவிலோ அல்லது ஆசியாவின் வேறு எந்தப் பகுதியிலோ காணப்படாது. இருப்பினும் நாசா மற்றும் மெக்டொனால்ட் அப்சர்வேட்டரி வழங்கும் நேரடி ஒளிபரப்புகளை நீங்கள் பின்பற்றலாம்.
இந்நிலையில், ஒவ்வொரு முறை கிரகணம் வரும்போதும் புதுப்புது கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. நிகழ்வு பற்றிய கட்டுக்கதைகளும் அவற்றின் அறிவியல் உண்மைகள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
- கிரகணத்தைப் பார்ப்பது ஆபத்தா?
உண்மை: நீங்கள் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி , கிரகணத்தைப் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது. சூரியனைக் கவனிக்கும் போது, அதாவது, கிரகணத்தின் தொடக்கத்தில் இருந்து, பகுதிக் கட்டம் வரை மற்றும் முழுவதுமாக நீங்கள் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும். முழு கிரகண நிகழ்வையும் சரியான பாதுகாப்பு கண்ணாடி, கருவி அணிந்து பார்க்கலாம். அதில் எந்த ஆபத்தும் இல்லை. மேலும், கிரகணத்தைக் கவனிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் ஒரு செய்தி உண்டு. முழு சூரிய கிரகணத்தில் உள்ளார்ந்த ஆபத்தான எதுவும் இல்லை என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.
- சூரிய கதிர்வீச்சு உணவை விஷமாக்குகிறதா?
உண்மை: முழு சூரிய கிரகணத்தின் போது தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள் வீசப்படுகிறது என்றும் அவை சாப்பிடும் உணவுக்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் ஒரு பொதுவான கருத்து சொல்லப்படுகிறது. இதில் துளியாவது இருந்திருந்தால், அதுவே நம் சமையல் அறையில் உள்ள பொருட்களை அல்லது வயலில் உள்ள பயிர்களையோ விஷமாக மாற்றியிருக்கும்.
இந்த அறிவியலற்ற கூற்றுகள் சூரியனின் கரோனாவின் தோற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதேபோல், முந்தைய நாட்களில் நிறைய பேர் இதே கதிர்வீச்சு மனிதர்களுக்கு பிறவி குறைபாடுகளை ஏற்படுத்துவதாக கூறி வந்தனர்.
இந்த கருத்து வன்முறை மற்றும் குழப்பத்துடன் தொடர்புபடுத்தும் ஜோதிடர்களால் இந்தக் கூற்றுகள் பரப்பப்பட்டன என்றும் கூறப்படுகிறது. கிரகணத்தின் போது ஏற்படும் சூரிய கதிர்கள் அல்லது சூரிய ஒளி இதுபோன்ற எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தைத் தவிர்க்க வேண்டும், அவை குழந்தைக்கு ஆபத்து ஏற்படுத்துமா?
உண்மை: இந்த கட்டுக்கதை முழு சூரிய கிரகணத்தின் போது தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு பற்றிய பழங்கால நம்பிக்கைகளின் விளைவாகும். உண்மையில், சூரியனின் கரோனாவிலிருந்து வரும் ஒளி, கிரகணத்தின் போது தெரியும், அது பாதுகாப்பானது. இந்த கட்டுக்கதைக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று நாசா கூறுகிறது.
சூரியன் அதன் மையத்தில் அணுக்கரு இணைவு காரணமாக மற்றொரு வகையான கதிர்வீச்சை வெளியிடுகிறது. இந்த செயல்முறை நியூட்ரினோக்களை உருவாக்க வழிவகுக்கிறது, இது சூரியனிலிருந்து விண்வெளி வழியாக உடனடியாக பயணிக்கும் சிறிய துகள்கள் கிரகணத்தின் போது சந்திரன் மற்றும் பூமி வழியாகவும் கூட செல்கிறது. இந்த நியூட்ரினோக்கள் சூரியனின் நிலையைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு நொடியும் நம் உடலில் டிரில்லியன் கணக்கான துகள்களை வீசுகின்றன.
+ There are no comments
Add yours