ரியல்மி நிறுவனம் இந்தியாவில் இன்று (29.01.2024) தனது நம்பர் சீரிஸ் மொபைலின் புதிய மிட் ரேஜ் ஸ்மார்ட்போன் realme 12 pro 5G சீரிஸ் மொபைலை அறிமுகம் செய்துள்ளது.
ரியல்மி 11 5G சீரிஸின் பஅப்க்ரேட் வெர்ஷனாக வெளி வந்திருக்கும் இந்த மொபைல் snapdragon 7s gen 2 சிப்செட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
realme 12 pro 5G ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான realme UI 5.0 OS-ல் இயங்கவல்லது. இந்த மொபைல் snapdragon 7s gen 2 சிப்செட்-ல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது சிறந்த போட்டோகிராபி மற்றும் பர்பார்மன்ஸ் அளிக்கவல்லது என realme 12 pro 5G சீரிஸ் அறிமுக விழாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிப்செட், மிக தெளிவான மட்டும் அதிகளவு டீடைலிங் கொண்ட புகைப்படம் எடுக்கவும், ஸ்மூத் ஜூம் செய்யவும், வேகமாக பிராசஸ் செய்யவும் உதவுகிறது. மற்றும் இதில், குறைந்த வெளிச்சத்தில் தெளிவான புகைப்படம் எடுக்க AI De Noising (AIDE) தொழில்நுட்பமும், Multi frame noise reduction தொழில்நுட்பமும் அளிக்கப்பட்டுள்ளது.
லைட்னிங் ஃபாஸ்ட் எக்பீரியன்ஸ் அளிக்கவல்ல இந்த சிப்செட்-ன் CPU வேகம் 2.4 Ghz வரையிலும் கொண்டிருக்கிறது.
மேலும், realme 12 pro 5G கேமராவில் 6X Zoom Lossless போட்டோ எடுக்க முடியும். அதாவது 6x ஜூம் வரை குவாலிட்டி குறையாத சிறந்த தெளிவான புகைப்படங்கள் எடுக்க முடியும். இதுமட்டுமின்றி, 8 MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் 32 MP செல்பி கேமராவும் அளிக்கப்பட்டுள்ளன.
விலை
realme 12 pro+ 5G
8+128 GB – ரூ.29,999
8+256 GB – ரூ.31,999
12+256 GB – ரூ.33,999
realme 12 pro 5G
8+128 GB – ரூ.25,999
8+256 GB – ரூ.26,999 ஆகும்.
+ There are no comments
Add yours