நத்திங் நிறுவனம் சாட்ஜிபிடி அம்சத்துடன் புதிய இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.
இந்த இயர்பட்ஸில் இருக்கும் முக்கியமான அம்சம் என்னவென்றால், இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது.
நிச்சியம் இது உங்கள் கவனத்தை ஈர்க்கும். எனினும் புதிய Ear TWS இயர்பட்ஸில் என்ன மாதிரியான ஆடியோ தொழில்நுட்ப வசதிகள் இருக்கிறது என்பதையே முதலில் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முயல்வார்கள்.
நத்திங் Ear இயர்பட்ஸின் விலை ரூ.11,999 ஆகும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. நத்திங் Ear A இயர்பட்ஸின் விலை ரூ.7,999 ஆகும்.
இது வழக்கமான நிறத்தோடு சேர்த்து புதிதாக மஞ்சள் நிறத்திலும் கிடைக்கிறது. ஏப்ரல் 22-ம் தேதி முதல் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்கு வருகிறது.
இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Ear 2 போலவே தான் இந்த இயர்பட்ஸ்களின் வடிவமைப்பும் இருக்கும் என்றாலும் இந்த புதிய வெர்ஷனில் ஆடியோ வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நத்திங் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு TWS இயர்பட்ஸ்களிலும் 11mm டைனமிக் டிரைவர்ஸ், 45dB ANC சப்போர்ட் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த இயர்பட்ஸின் ஆடியோ டூயுனிங் ப்ரீமியம் ரகத்தில் உள்ளது.
+ There are no comments
Add yours