ரியல்மீ P1 ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆகும். மிட் ரேஞ்ச் 5ஜி போனான இதில் குயால்காம் சிப்செட், வழக்கமான 5,000mAh பேட்டரி, பெரிய ஸ்க்ரீன் மற்றும் பல வசதிகள் உள்ளது. ரியல்மீ P1 ப்ரோ போன் நத்திங் போன் 2a, போகோ X6, iQOO Z9 ஆகியவற்றுக்கு போட்டியாக திகழ்கிறது.
இந்த நிலையில், 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட ரியல்மீ P1 ப்ரோ மாடலின் விலை ரூ.21,999 ஆகும். அதேநேரத்தில், 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் என்றால், அதன் விலை ரூ.22,999 ஆகும்.
அறிமுக சலுகையாக இந்தப் போனின் பேஸ் வேரியண்டை ரூ.19,999 விலையிலும், இதன் உச்சபட்ச மாடலை ரூ.20,999-க்கும் வாங்கலாம்.
ரியல்மீ P1 ப்ரோ போனில் பெரிதான 5,000mAh பேட்டரி உள்ளது. அதற்கு உதவியாக 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தப் போனின் அட்டைப் பெட்டிக்குள் ஃபாஸ்ட் சார்ஜரையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours