கிரெடிட் கார்டு மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு நீங்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கிரெடிட் கார்டு மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
கார்டு விவரங்களை பாதுகாப்பாக வைத்தல்:
உங்களுடைய PIN, CVV கோடு அல்லது முழு கிரெடிட் கார்டு நம்பர் போன்றவற்றை யாரிடமும் இமெயில் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ பகிர்ந்து கொள்ள கூடாது. இதுபோன்ற சேனல்கள் மூலமாக வங்கிகள் ஒருநாளும் இந்த தகவல்களை கேட்க மாட்டார்கள்.
உங்களுடைய கிரெடிட் கார்டு ட்ரான்ஸாக்ஷன்களை அவ்வப்போது ஆன்லைன் பேங்கிங் அல்லது மொபைல் அப்ளிகேஷன் மூலமாக கண்காணிக்கவும். ஏதேனும் அதிகாரப்பூர்வமற்ற ட்ரான்ஸாக்ஷன்களை கண்டால் உடனடியாக அதுகுறித்து வங்கியில் புகார் அளிக்கவும்.
ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் பொழுது நீங்கள் நம்பகமான வெப்சைட்டை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் பாதுகாப்பான இன்டர்நெட்டை உபயோகிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வங்கி உங்களுக்கு வழங்கி இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தவற வேண்டாம். செலவு செய்யும் லிமிட்டுகள், டூ ஃபேக்டர் ஆதன்டிகேஷன் அல்லது உங்களுடைய உண்மையான கார்டு விவரங்களை பகிர தேவையில்லாத மொபைல் வாலட்டுகள் போன்ற அம்சங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு தெரியாத ஏதேனும் டிரான்ஸாக்ஷன் நடந்துள்ளதா என்பதை உங்களின் கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்டை வழக்கமான முறையில் ஆய்வு செய்வதன் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள்.
+ There are no comments
Add yours