முதலில் உங்களுடைய வாட்ஸ்அப் அக்கவுண்டை திறந்து அதில் வலது கீழ் மூலையில் காணப்படும் மெட்டா AI ஐகானை காணவும். மெட்டா AI சாட் பாக்ஸை பயன்படுத்துவதற்கு இந்த ஐகானை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது நீங்கள் AI இடம் பல்வேறு கேள்விகளை கேட்கலாம், இமேஜ்களை வழங்க சொல்லலாம் மற்றும் உங்களுக்கு விருப்பமான விஷயங்களை விவாதிப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம்.
பல்வேறு விதமான பரிந்துரைகள் மற்றும் பிராம்ப்ட்களை நேரடியாக சர்ச் இன்டர்ஃபேசில் வழங்கக்கூடிய இந்த அம்சத்தின் உதவியுடன் யூசர்கள் திறம்பட Meta AI உடன் தொடர்பு கொள்ளலாம்.
வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா தற்போது மெட்டா ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்(AI) அம்சங்களை அதன் மெசேஜிங் அப்ளிகேஷன்களில் சோதித்து வருகிறது.
இந்த அம்சம் தற்போது பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டு அப்ளிகேஷன்களிலும் கிடைக்கக்கூடிய சர்ச் பாக்ஸ் மூலமாக யூசர்கள் நேரடியாக மெட்டா AI அம்சத்தை பயன்படுத்தலாம்.
+ There are no comments
Add yours