ஐபோன்கள் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பமடைவதாக கூறப்படுகிறது. இவ்வாறு ஐபோன் தொடர்ச்சியாக வெப்பமடைந்தால் அது ஐபோனை நிரந்தரமாக சேதப்படுத்தலாம்.
ஆப்பிள் நிறுவனத்தை பொறுத்தவரையில், ஐபோன்கள் 0 டிகிரி முதல் 35 டிகிரி வரையிலான வெப்ப நிலையில் வேலை செய்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பநிலையை விட அதிகமான வெப்ப நிலையில் ஐபோன்களை தொடர்ந்து பயன்படுத்தினால் அது சாதனத்தை சேதப்படுத்தலாம் அல்லது பேட்டரியின் ஆயுட்காலத்தை குறைக்கலாம். எனவே கோடை காலத்தில் ஐபோனை கூலிங்காக வைக்க உதவும் ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்ப்போம்.
ஐபோனை குளுமையான இடத்தில் வைக்க வேண்டும். நேரடி சூரிய வெளிச்சம் படாத வகையில் ஐபோன் சாதனத்தை வைப்பது நல்லது. கோடைக்கால வெப்பம் மிகவும் மோசமானதாக இருக்கலாம்.
இதனால் ஐஃபோனுக்கு நிரந்தர சேதம் உண்டாக வாய்ப்புள்ளது. ஆகவே ஐபோன் வெப்பமாகி விட்டதாக உணர்ந்தால் அதனை உடனடியாக வீட்டிற்குள் கொண்டு வந்து வழக்கமான வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.
ஐபோன்களை தொடர்ச்சியாக பல மணி நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். உங்களுடைய ஐபோன் உபயோகத்திற்கு இடையிடையே பிரேக் கொடுப்பதன் மூலமாக அது வழக்கமான வெப்ப நிலைக்கு திரும்புவதை உறுதி செய்யலாம்.
பேக்ரவுண்டில் இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன்களை மூடிவிட்டு ஐபோனுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
ஐபோனில் ஏர்பிளேன் மோடை ஸ்விட்ச் ஆன் செய்வது அதனை குளுமைப்படுத்த உதவும். குறிப்பாக குறைந்த சிக்னல் கொண்ட பகுதியில் ஐபோனை பயன்படுத்தும் பொழுது இதனை செய்ய வேண்டும்.
ஏர்பிளேன் மோடுகளை ஸ்விட்ச் ஆன் செய்வது சாதனத்தை குளுமைப்படுத்த மட்டும் அல்லாமல் அதன் பேட்டரி ஆயுட்காலத்தையும் மேம்படுத்த உதவும்.
பொதுவாக நமது ஐபோன்களை பாதுகாக்கவும், அதனை ஸ்டைலாக காட்டிக் கொள்ளவும் பெரும்பாலான யூசர்கள் பேக் கேஸ் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவை குறிப்பாக வெப்ப கடத்தா பொருட்களால் செய்யப்பட்டிருந்தால், வெப்பத்தை சாதனத்திலிருந்து வெளியேற்ற அனுமதிக்காது.
ஐபோன் அளவுக்கு அதிகமாக வெப்பம் ஆகிவிட்டால் உடனடியாக பேக் கேசை அவிழ்த்து வெப்பத்தை வெளியேற்ற வேண்டும்.
வழக்கமான முறையில் ஐபோனை அப்டேட் செய்யும் பொழுது அதில் அதிகப்படியான வெப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
அதன் ஒவ்வொரு புதிய iOS பதிப்பிலும் ஆப்பிள் மிகப்பெரிய அப்டேட்டுகளை வெளியிடுவது வழக்கம். ஆகவே சாதனம் எந்த ஒரு தடையும் இல்லாமல் சீராக இயங்குவதற்கும், குறைந்தபட்ச ஆற்றலை பயன்படுத்துவதற்கும் அதனை வழக்கமான முறையில் அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
+ There are no comments
Add yours