கூகுள் மேப்ஸ் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு நன்மை வழங்கக்கூடிய மற்றுமொரு அப்டேட்டை அறிவித்துள்ளது.
அதன்படி, கூடிய விரைவில் உலகம் முழுவதும் அமைந்திருக்கும் அருகில் உள்ள EV சார்ஜிங் ஸ்டேஷன்களை டிஸ்ப்ளே செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அம்சம் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் மூலமாக இயங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலமாக கஸ்டமர்கள் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கிடையில், வளர்ந்து வரும் EV துறைக்கு பங்களிக்கும் வகையில், இன்-கார் மேப்புகளில் நேரடியாக அருகில் உள்ள சார்ஜர்களை வழங்குவதற்கான முயற்சியில் கூகுள் மேப்ஸ் வேலை செய்து வருகிறது.
வரக்கூடிய இந்த அப்டேட்டின் உதவியுடன் கஸ்டமர்களால் ரியல் டைம் போர்ட் கிடைக்கும் தன்மை மற்றும் சார்ஜிங் வேகத் திறன்கள் மற்றும் பல விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த அப்டேட் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. கூகுளின் பில்ட்-இன் சிஸ்டம்கள் கொண்ட வாகனங்கள் இந்த அப்டேட் மூலமாக பலன் அடையலாம் என்பது இதன் மூலமாக தெரிய வந்துள்ளது.
+ There are no comments
Add yours