பிரபல சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி சமீபத்தில் இந்தியாவில் தனது Narzo 70 5G சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த சீரிஸில் Narzo 70 5G மற்றும் Narzo 70x 5G உள்ளிட்ட 2 மொபைல் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
மேற்கண்ட 2 மொபைல்களும் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளன. மேலும் இவை டைனமிக் ரேம் அம்சத்தை கொண்டுள்ளன. Narzo 70x 5G மொபைலில் மினி கேப்சயூல் 2.0 அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இவற்றின் விலைகள் முறையே ரூ.10,999 மற்றும் ரூ.11,999 ஆகும். இந்த 2 மொபைல்களும் ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் ஐஸ் ப்ளூ கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.
டூயல் நானோ சிம் (சப்போர்ட் கொண்ட புதிய Narzo 70 5G மொபைலானது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான Realme UI 5.0 ஸ்கின் மூலம் இயங்குகிறது. இந்த மொபைலுக்கு 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்ஸ் மற்றும் 2 ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் வழங்கப்படும் என்று ரியல்மி உறுதியளித்துள்ளது.
இந்த மொபைல் 120Hz ரெஃப்ரஷ் ரேட், 240Hz டச் சேம்ப்ளிங் ரேட் மற்றும் 1,200 nits பீக் பிரைட்னஸ் கொண்ட 6.67-இன்ச் ஃபுல் -HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours