ஏர் கூலரில் குளிர் காற்று வர என்ன செய்ய வேண்டும்?

Spread the love

குளிர்காலங்களில் ஏர்- கூலர் பயன்படுத்தி இருக்க மாட்டீர்கள். ஆனால் கோடையில் ஏர் கூலரிலிருந்து வரும் காற்று சில்லென்று இருக்க அதை சரியான இடத்தில் வைக்க பழக வேண்டும். ஏசி போல் அல்லாமல் இதை எங்கு வேண்டுமானாலும் வைத்து பயன்படுத்தலாம்.

திறந்த ஜன்னல் அல்லது கதவுக்கு அருகில் வைத்து பயன்படுத்தலாம். இது புதிய காற்றை தொடர்ச்சியான ஒட்டத்துக்கு அனுமதிக்கிறது. இதன் மூலம் ஆவியாதல் குளிரூட்டும் செயல்முறை சீராக இயங்குகிறது.

காற்றின் சீரான விநியோகம் கிடைக்க ஏர் கூலரை அறையின் மையத்தில் வைக்கலாம். சரியான காற்றோட்டம் குளிர்ச்சிக்கு முக்கியமானது. காற்றோட்டம் உள்ள இடத்தில் இவை சீராக செயல்படும். அதோடு அறையில் இருந்து ஈரப்பதத்தை வெளியேற்ற நல்ல காற்றோட்டமான இடம் அவசியம்.

ஏர் கூலர் நீண்ட நாட்களாக பயன்படுத்தவில்லையென்றால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் பருவங்களில் சரி பார்க்க வேண்டும். கோடையில் தினசரி ஏர் -கூலர் பயன்படுத்துவதால் அவ்வபோது பரிசோதியுங்கள்.

முதலில் கூலிங் பேட்களை சுத்தம் செய்யுங்கள். ஏனெனில் அதை அதிகம் பயன்படுத்தும் போது அது தூசி மற்றும் அழுக்குகளை தேக்கிவைக்கின்றன. வாரத்தில் ஒரு முறை பிரஷ் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

அதிக தூசி இருந்தால் அதை மாற்றுவதே சிறந்த வழி. ஏர் கூலர் பராமரிப்பில் முக்கியமானது தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது. தொட்டியிலிருந்து கசிவு ஏதேனும் உள்ளதா என்பதையும் அவ்வபோது கவனியுங்கள். தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குறைந்தால் ஏர்- கூலர் குளிர்ந்த காற்று வராது.

அதனால் தொட்டியின் கொள்ளளவுக்கு ஏற்ப சரியான முறையில் பராமரிப்பது முக்கியம். குறிப்பிட்ட மாதத்துக்கு ஒருமுறை உரிய நிபுணரிடம் சர்வீஸ் செய்வது அவை சீராக இயங்க உதவும்.

ஏர் கூலர் குளிரூட்டுவது அதிகரிக்க சிறந்த வழி அதில் தண்ணீர் நிரப்பும் தொட்டியில் குளிர்ச்சியை அதிகரிக்க பனிக்கட்டி சேர்ப்பதாகும். ஏர்- கூலர்கள் தற்போது குளிரூட்டிகளுடன் கூடியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

அதற்கேற்ப குளிரூட்டிகள் கொண்ட பிரத்யேக பெட்டிகளுடன் ஏர்- கூலர்கள் கிடைக்கிறது. தண்ணீரில் ஐஸ் கட்டி சேர்ப்பது அதன் விசிறிப்பட்டையை குளிர்ச்சியாக்குகிறது. இதனால் குளிர்ந்த காற்று அதன் வழியாக செல்கிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours