தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு!

Spread the love

Kalyan Jewelery revenue growth
நான்காவது காலாண்டு மற்றும் முழு FY24க்கான உண்மையான வருவாய் புள்ளிவிவரங்களை நிறுவனம் வழங்கவில்லை.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்து இருந்தது. இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை சற்று சரிவை சந்தித்த நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஒரு சவரன் ஆபரண தங்கம் 55 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்து முதல் முறையாக கிராம் ஒன்றுக்கு 101 ரூபாயை எட்டி இருந்தது. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் விலை குறைந்து 6,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 320 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி இன்று 2 ரூபாய் விலை சரிந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 99 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours