சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 21) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ,6235 ஆகவும், ஒரு பவுன் ரூ.49,880-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6235-க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.49,880-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை விரைவில் பவுன் ரூ.50 ஆயிரத்தை எட்டும் என்று சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளி விலை கிராம் 1 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.81.50-க்கு விற்பனையாகிறது.
+ There are no comments
Add yours